VI. v. t. literally to be of one mind; 2. copulate,
(irreg.) &
ஆக , inf. to be; 2. adv. altogether; 3. afflx (joined with dative) for; 4. affixed to the nominative it signifies as or changes the subst. into an adverb.
அதாகவில்லை , it has not succeeded.
ஆக , (ஆகத்தொகை )நாற்பது ரூபாய் , altogether or total Rs.4.
எனக்காக , for me, for my sake.
இதுக்காக , therefore.
கூலியாகக் கொடுத்தான் , he gave it as wages.
தயவாக ,தயவாய் , kindly.
தானாக , (தானாய் )வந்தான் , he came of his own accord, voluntarily.
நானும் அவனுமாக , (ஆய் ), he and I together.
ஆகக்கடவது ,ஆவதாக , may it be, let it be.
ஆகவே ,ஆகக்கொள்ள , therefore.
ஆகா ,ஆகாத , neg. adj. part. impossible bad, vicious.
ஆகாதகாரியம் , a bad or impossible thing.
ஆகாதது , what is unbecoming, what is unsuitable.
ஆகாதவன் , a bad man.
ஆகாது , it does not become, it is bad.
ஆகாவிட்டால் , if not.
அது ஒன்றுக்கும் ஆகாது , it is good for nothing.
அவனுக்கும் எனக்கும் ஆகாது , we are not upon good terms.
அவனாலே ஆகாது , he connot do it.
இப்படி , (இது )செய்யலாகாது , you ought not to do so.
ஆகாதே போம் , it will not succeed.
ஆகிப்போக ,ஆயிப்போக ,ஆகிவிட ,ஆய் விட , to come to an end; to be exhausted.
அவன் காரியம் ஆகிப்போயிற்று ,அவ னுக்கு ஆகிப்போயிற்று , his work is over, he is dead.
ஆகிலும் ,ஆயினும் ,ஆயும் ,ஆனாலும் ,ஆகிலுமோ ,ஆனபோதிலும் ,ஆனாலுமோ , yet, however, nevertheless but; 2. (affixed) though, although, at least etc. See the following phrases:--
தந்தானானாலும் , although he has given
அவனாகிலும் , (ஆனாலும் ) he at least.
ஒருவனாகிலும் இல்லை , there is not even one person.
ஆராகிலும் , sombody, anybody.
எவனாகிலும் , whosoever, anybody.
எங்கேயாகிலும் , (ஆனாலும் ) anywhere.
எதுவாகிலும் ,எதாகிலும் ,ஏதாகிலும் , anything; whatsoever.
எப்படியாகிலும் , howsoever, anyhow, at any rate.
இவனாகிலும் ,அவனாகிலும் (ஆனாலும் ,என் கிலும் ,ஆவது ) either this or that man.
அகில் ,ஆகின் ,ஆகினால் ,ஆயின் ,ஆனால் , if it be so, if.
அவன் வந்தானாகில் , (ஆனால் ) if he is come.
ஆகுபெயர் , see underஆகு .
ஆகை ,ஆகுதல் ,ஆதல் , v. n. becoming, being; being fit.
ஆகையால் ,ஆகையினாலே ,ஆதலால் ,ஆதலின் ,ஆனதினால் , therefore; 2. (affixed) because.
அவன் வந்தானாகையால் , because he came.
ஆம் ,ஆகும் , fut. adj. part. being proper, possible; 2. third pers. neut, it will be, yes.
ஆமாமாம் , certainly.
ஆங்காரியம் ,ஆகுங்காரியம் , a proper thing.
ஆங்காலம் , a proper time for bringing a thing to pass.
அந்தனையும் ,ஆமளவும் , as much as possible.
ஆமோ ,அல்லவோ , yes or no, is it so or not.
ஆம் , as afflx expresses possibility, probability or permission.
அரிசியாம் , it is said that is rice.
அவன் வந்தானாம் , he is said to be arrived.
வருவானாம் , perhaps he will come, they say that he will come.
நீ இப்படிச் செய்யலாம் , you may do so.
ஆயிற்று , (com.ஆச்சு ,ஆச்சுது ), it is done or finished.
ஆயினும் ,ஆயின் , seeஆகில் ,ஆகிலும் .
ஆய் , adv. part. having become; 2. affixed to nouns it is used asஆக which see.
ஆவது , what is or will be; it is used also before quotations, in certain questions etc.,
அதாவது , to wit, namely, videlicet.
அவன் சொன்னதாவது ,அவன் சொன்ன விவரமாவது , he said as follows.
பாவமாவதென்ன , what is sin ?
இரண்டாவது , secondly.
இவனாவது ,அவனாவது (ஆகிலும் ) either this man or that.
ஆன , adj. part. having been done, being being fit; 2. affixed to substantives it changes them into adjectives.
ஆன பெண்சாதி , an agreeable or pleasing wife.
ஆன பிரத்தியுத்தரம் , a suitable answer
என்னால் ஆனமட்டும் , as much as lies in my power.
சந்தோஷமான முகம் , a cheerful countenance.
ஆனது , v. n. what is; 2.ஆனது andஆனவன் (who is) are often affixed to nouns to put stress upon them.
எனக்கானது , what I like, what is profitable to me.
மரமானது , the tree.
கர்த்தரானவர் , the Lord.
ஆனதுகொண்டு ,ஆனபடியினால் ,ஆனது பற்றி ,ஆனதன்மையால் , therefore.
ஆனால் , same asஆகில் (imprep. used also forஆகிலும் , but).
ஆனாலும் , seeஆகிலும் .